முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.75 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்க்கில் கடந்த மே மாதம் 22ம் தேதி புதுகை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி பூா்ண ஜெய ஆனந்த் முன் விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர், ரம்யா ஆகியோர் இன்று ஆஜராகவில்லை. அவர்களது சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வேண்டுகோளை ஏற்று வழக்கு வரும் நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
விஜயபாஸ்கர் சொத்துகுவிப்பு வழக்கு… நவ.15க்கு தள்ளிவைப்பு
- by Authour
