புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் சி.விஜயபாஸ்கர். கடந்த அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சராக இருந்தார். இப்போது விராலிமலை தொகுதி எம்எல்ஏ. புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் காய்ச்சலால் அவதிப்பட்டார். திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பரிசோதனை செய்யப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. விஜயபாஸ்கர் உடல் நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.