ஆண்டுதோறும் டிசம்பர் 16-ம் தேதி வங்கதேசம், சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. இந்தியா – பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த வீரர்களைப் போற்றும் வகையில் அந்த நாள், `விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இந்தியாவில் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் 16-ம் தேதி விடுதலைப் போரில் பங்கேற்றவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும். டாக்காவில் ரமணா குதிரைப் பந்தைய மைதானத்தில் 93,000 பாகிஸ்தான் வீரர்கள், ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாஸி தலைமையில் இந்திய ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ஜெக்ஜித்சிங் அரோரா தலைமையிலான கூட்டுப் படைகளிடம் சரணடைந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிபெற்று 51
ஆண்டுக்காலம் நிறைவு பெறுவதையொட்டி திருச்சி ஸ்டேஷன் கமாண்டர் கர்னல் தீபக்குமார் தலைமையில், மேஜர் சரவணன் சகோதரி டாக்டர்.சித்ரா, தமிழ்நாடு என்சிசி பட்டாலியன் (2) லெப்டினன்ட் கர்னல் அருண்குமார் ஆகியோர் மேஜர் சரவணன் ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.