நடிகர் விஜய் சாய்பாபா கோயிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைரலானது. என்ன விஷயம் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். பின்புதான், தனது அம்மா ஷோபாவின் ஆசையை நிறைவேற்ற நடிகர் விஜய் கட்டிய கோயில் அது என்று தெரிய வந்தது. சென்னை, கொரட்டூரில் இருக்கும் இந்த கோயில் குறித்து கேள்விப்பட்டவுடன் அங்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
அங்கு அவரை விஜயின் தாயார் ஷோபா வரவேற்றுள்ளார். இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள லாரன்ஸ், “நண்பன் விஜயின் சாய்பாபா கோயிலுக்கு அவருடைய தாயுடன் சென்றேன். நான் ராகவேந்திரா கோயிலைக் கட்டியபோது, அங்கு ஷோபாம்மா பாடல் பாடி சிறப்பித்தார். இன்று அவர்களுடைய கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தது மகிழ்ச்சி.
நடிகர்கள் விஜய் மற்றும் ராகவா லாரன்ஸ் இருவருமே நல்ல நண்பர்கள். குறிப்பாக, ‘திருமலை’ படத்தில் இருவரும் சேர்ந்து நடனமாடிய ‘தாம் தக்க…’ பாடல் இப்போதுமே பலருக்குப் பிடித்த ஒன்று.
மீண்டும் இருவரும் இப்படி ஒரு பாடலையும் நடனத்தையும் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கையில் விஜய் மீதுள்ள அன்பை வெளிப்படுத்த அவர் கட்டியுள்ள கோயிலுக்குச் சென்று தனது வாழ்த்துகளையும் கூறியிருக்கிறார் லாரன்ஸ்.