கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இக்கதையினை முன்பே கேட்டுவிட்டு நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் விஜய் சேதுபதி. ஆனால், ‘காதலிக்க நேரமில்லை’ பட வெளியீடு தாமதத்தினால் இப்படம் தாமதமாகி இருக்கிறது. தற்போது திரைக்கதையினை இறுதிச் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் கிருத்திகா உதயநிதி – விஜய் சேதுபதி கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.