இயக்குநர் ஷங்கர் ராம்சரணை இயக்கி வருகிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.அடுத்து கமலஹாசனை வைஅந்து இந்தியன் 2 வை இயக்க உள்ளார். நடிகர் பதான் பட வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் டைரகடர் அட்லீயின் ‘ஜவான்’ படத்தில் பிசியாக உள்ளார். அடுத்து அவருக்கு டுங்கி என்ற படமும் உள்ளது. நடிகர் விஜய் வாரிசு வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் டைரக்டர் ஷங்கர்
இயக்கத்தில் 900 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நீருக்கடியில் அறிவியல் புனைகதை ஒன்றை படமாக எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இது இரண்டு ஹீரோக்கள் கொண்ட ஒரு படமாகும் என்றும் இதில் ஷாருகான் – விஜய் நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. 2 பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மெகா பட்ஜெட் படத்தைத் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் படத்திற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் என்பதால் ஷாருக்கான் மற்றும் விஜய்யின் வருகைக்காக் இறுதியில் அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஷங்கரின் இயக்கத்தில் விஜய் மற்றும் ஷாருக்கான் இணைந்து நடிப்பது கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும். ஆனால் இதுகுறித்த எந்த அதிகார பூர்வமான அறிவிப்புகளும் இல்லை. டைரக்டர் அட்லீ பாலிவுட்டில் அறிமுகமாகும் ஷாருக்கானின் அடுத்த வெளியீடான ‘ஜவான்’ படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.