நடிகர் விஜய் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் கோவை மாவட்ட தளபதி விஜய் ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் நீ…வா தலைவா, இலவச கல்வி தா… தலைவா என்ற அரசியலை குறிப்பிடும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தினர் சமீபகாலமாக அரசியல்
நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது பொதுமக்களிடையே கவனம் பெற்றுள்ளது.