தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய முகமாக அறியப்படுவர் நடிகர் விஜய். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் நடித்து வரும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தினந்தோறும் அவரை காண ரசிகர்கள் தவமாய் தவமிருந்து இருக்கின்றனர்.
இதற்கிடையே நடிகர் விஜய்யின் தந்தையுடனான பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக அவரது அம்மாவை சந்திக்காமல் இருந்தார். இந்நிலையில் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபானா தம்பதியினர் இன்று தங்களது 50வது திருமண நாளை கொண்டாடினர். இதையொட்டி நடிகர் விஜய், தனது தாய் ஷோபாவை சந்தித்து பேசினார். அப்போது தனது தாய் ஷோபா மேல நாற்காலியில் அமர்ந்திருக்க விஜய் கீழே தரையில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 50 நாட்கள் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில் தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.