விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தின் மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் மாஸாக உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. லோகேஷ் கனகராஜின் மிரட்டலான இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் அப்பா – மகள் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் எமோஷ்னல் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதலில் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் 50 நாட்கள் வரை நடைபெற்றது. இதையடுத்து சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு கஞ்சா ஆலை செட் அமைக்கப்பட்டு விஜயின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜயின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள ‘லியோ’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மிரட்டலாக உள்ளது. அதில் விஜய் மாஸ் லுக்கில் இருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.