’லிஃப்ட்’, ‘டாடா’ என அடுத்தடுத்து கவனம் ஈர்க்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் கவின். அவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘ஸ்டார்’ படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டிக் கொடுத்து வருகிறார் கவின்.
![நடிகர் கவின்](https://media.assettype.com/kamadenu%2F2023-09%2F71dfcfd3-3f37-4f88-91fa-58a3e501db2f%2F4f92eeda-fa5e-49b5-9023-c2f6b23d1eb5.jpg?w=640&auto=format%2Ccompress)
நடிகர் கவின்
இந்நிலையில், நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிப்பதாக எழுந்த பேச்சு உண்மைதானா என்கிற கேள்விக்கு, , “விஜய் மகன் என்னிடம் பேசியது உண்மைதான். ஜேசன் சஞ்சய் என்னிடம் கதை சொன்னார். மிகவும் எளிமையாக நட்பு ரீதியிலான சந்திப்பு அது. அந்த சமயத்தில் நான் அடுத்தடுத்துப் படங்கள் நடிக்க கமிட் ஆகியிருந்தேன்.
![இயக்குநராகும் ஜேசன் சஞ்சய் விஜய்.](https://media.assettype.com/kamadenu%2F2023-08%2Fcb0c2a46-f024-4cd5-ba52-b15e2d0abb8d%2FLyca_Productions_Next__2023__3_1.jpg?w=640&auto=format%2Ccompress)
இதுகுறித்தான அறிவிப்பு வெளியாகி விட்டாலும், படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்பக் குழுவினர் என எந்தவிதமான விவரமும் இன்னும் வெளியாகவில்லை. படம் குறித்தான அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.