வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 67வது படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். புதிய படத்திற்கு இன்னும் பெயர் வெளியிடப்படாத நிலையில் தளபதி 67 என்ற பெயரில் புதியபடம் குறிப்பிடப்படுகிறது. இந்த தளபதி 67 படம் இந்தியா முழுவதும் எதிர்பாக்கும் படமாக அமைய இருக்கிறது. நேற்று மாலை தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக படத்தின் அறிவிப்பை வௌியிட்டது. கடந்த 2ம் தேதி முதல் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் படபூஜை நடைபெற்றாலும் படத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்பது குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இணையத்தில் இயக்குனர் மிஷ்கின், நடன கலைஞர் சாண்டி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் , 15 நிமிட காட்சிகளில் உலகநாயகன் கமல்ஹாசனும் , 15வருடங்களுக்கு பிறகு நடிகை திரிஷாவும் இணைய இருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.
இந்தநிலையில் சென்னையில் தனியார் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட்
அமைத்து விஜய் பங்கு பெறும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. அதற்கு பிறகு கொடைக்கானலில் படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. நடிகர் விஜய் நடிக்கும் காட்சிகள் தமிழகத்தில் பொதுவௌியில் ப டமாக்கப்பட்டால் ரசிகர்கள் கட்டுக்கடுங்காமல் திரள்வார்கள் என்பதால் படத்தின் முக்கிய காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட உள்ளது.
இதற்காக தளபதி 67 படக்குழுவினர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காஷ்மீர்
புறப்பட்டு சென்றனர். சென்னையிலிருந்து புறப்பட்ட படக்குழுவை வரவேற்கும் விதமாக விமான நிலைய கவுன்டர்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பிரத்யேக போர்டிங் பாஸ் , கருப்பு சிவப்பு வண்ணத்தில் உருவாக்கப்பட்டு இருந்தது. மற்றும் விஜய்-ன் 67வது படத்தை குறிக்கும் விதமாக போர்டிங் பாஸ் கவுன்டர் எண் 6, 7 என குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு உள்ள பயணிகளுக்கு இது பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.