கரூர் மாவட்டம் விஜய் மக்கள் இயக்க அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொன்னன் சத்திரம் பகுதியில் உள்ள சித்தார்த்தா முதியோர் காப்பகத்தில் உள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அரவக்குறிச்சி
சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.