விஜய் நடித்துள்ள வாரிசு, அஜித்குமார் நடித்துள்ள துணிவு ஆகிய 2 படங்களும் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.இதில் வாரிசு திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார், அதேபோல் துணிவு திரைப்படத்தை பாலிவுட்டை சேர்ந்த போனி கபூர் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் (ரெட் ஜெயண்ட் மூவீஸ்) உதயநிதி ஸ்டாலினும், வாரிசு திரைப்படத்தை (செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ) லலித் குமாரும் வெளியிடுகின்றனர். இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் சம அளவிலான திரையரங்குகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அளித்துள்ள பேட்டி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ” விஜய் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். அது அனைவருக்கும் தெரியும். அவருக்கு அடுத்த இடத்தில் தான் அஜித் இருக்கிறார். .இது வியாபாரம், இரண்டு படங்களுக்கும் சம எண்ணிக்கையிலான திரையரங்குகள் என்பதை ஏற்க முடியாது துணிவு திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாரிசு படத்திற்கு அதிக தியேட்டர்கள் வேண்டுமென பேசப்போகிறேன்” என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.