நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியை அறிவித்தப் பின்பு அரசியல் களத்தில் அவருடைய ஒவ்வொரு செயல்பாடுகளுமே உற்று நோக்கப்படுகிறது. அந்த வகையில், இரண்டு கோடி உறுப்பினர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கை மையமாக வைத்து விஜயின் தவெக தற்போது செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் தான், இதன் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்குக் கீழ் மற்ற நிர்வாகிகளின் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் தினத்தையொட்டி இந்த அறிவிப்பை விஜயின் தவெக அறிவித்துள்ளது.