இயக்குநர் வெங்கட்பிரபு தமிழ் திரையுலகில் இயக்குநராக ‘சென்னை 26’ படம் மூலம் அடியெடுத்து வைத்து 17 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதனால், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் கிரிக்கெட் மேட்ச் பார்த்து ரிலாக்ஸ் செய்து ட்வீட் போட்ட வெங்கட்பிரபுவிடம் ‘GOAT’ பட அப்டேட் கேட்கவும் ரசிகர்கள் தவறவில்லை.

சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள், ரிலீஸ் தேதி என அடுத்தடுத்து அப்டேட் வெளியானது. யுவன் இசையில் வெளியான முதல் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறாமல் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இருந்தாலும் ஒரு பாட்டை வைத்து மட்டுமே யுவன் மீது நெகட்டிவ் விமர்சனம் வைக்க வேண்டாம் எனவும் சொல்லி வந்தனர் விஜய் ரசிகர்கள்.
அதாவது, நடிகர் விஜயின் பிறந்தநாள் ஜூன் மாதம் வருகிறது. இதைக் கொண்டாடும் விதமாக இரண்டாவது சிங்கிள் வெளியிடுகிறோம் என கூறியுள்ளார் வெங்கட்பிரபு. இந்த செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.