நடிகர் விஜய்யின் 49 வது பிறந்த நாளினை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலையில் ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தோகைமலை அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் இன்று காலை பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு ஒரு கிராம் அளவிலான தங்க மோதிரத்தினை அணிவித்தும், அங்கிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நடிகர் விஜய்யின் பிறந்தநாளினை கொண்டாடினார். அதேபோல் குளித்தலை அருகே வை.புத்தூரில் உள்ள தனியார் பள்ளியில்
குளித்தலை ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது பிறந்த நாளினை முன்னிட்டு தலைவா ப்ரொடக்சன் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட குளித்தலை கீதம் ஆல்பம் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.