விஜய்யின் தமிழக வெற்றி கழகமும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேசிய அளவில் கொள்கை ரீதியாக இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தில் சிறப்பு ஆலோசகராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் செயல்படவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் வியூக பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்படமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய், பிரசாந்த் கிஷோர் கட்சிகளுடன் இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நெருங்கும் பீகார் மாநில சட்டமன்ற தேர்தலை இந்த இரு கட்சிகள் மற்றும் உடன் வரும் கட்சிகளை வைத்து சந்திக்க முடிவு செய்துள்ளார். 2029 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலான கூட்டமைப்பை அமைக்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளார். தமிழகத்தில் விஜயின் தோழமை கட்சியாக பிரசாந்த் கிஷோர் கட்சி செயல்பட முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.