Skip to content

நடிகர் விஜயின் ’தளபதி 69’ படப்பிடிப்பு…. பூஜையுடன் தொடங்கியது… போட்டோஸ்…

  • by Authour

இன்று அதிகாலை தவெக மாநாட்டிற்கான பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ஒரே நாளில் நடிகர் விஜயின் ‘தளபதி69’ படத்தின் பூஜையும் இன்று காலை நடந்து முடிந்துள்ளது.

‘GOAT’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் ‘தளபதி 69’ படத்தை அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும், அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இதில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர்.

இன்று காலை படத்தின் பூஜை நடைப்பெற்ற நிலையில், சில சம்பிரதாய காட்சிகளுடன் படப்பிடிப்பு துவங்கியது. நாளை முதல் முழுவீச்சில் படப்பிடிப்பு நடைபெறும் என்கிற நிலையில், முதற்கட்டமாக பாடல் காட்சி படமாக்கப்பட

உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜயின் ‘GOAT’ படத்தில் இடம்பெற்ற ‘மட்ட…’ பாடலுக்கு நடனம் அமைத்த நடன இயக்குநர் சேகர் இந்தப் பாடலுக்கும் நடனம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!