லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும் பெற்றுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. தளபதி 67 படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு அதிரடியாக வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று வெளியான விஜய்யின் ரத்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ராய்ஸ், ஈகிள், கேங் என ஏகப்பட்ட டைட்டில்களையும் பதிவிட்டு இதில் ஏதாவது ஒன்று தான் இருக்கும் என கூறி வந்தனர். இந்த நிலையில் விஜய்யின் புதிய படத்தின் பெயட் லியோ என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.* லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67வது படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67வது படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியீடு அக்டோபர் 19ந்தேதி ரிலீஸ் ஆக உள்ளது.