காங்கிரஸ் எம்.பி. ராகுல், மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பதவி கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையானது. கடந்த 2 முறை எதிர்க்கட்சிகளுக்கு அதிக எம்.பிக்கள் கிடைக்காததால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி மக்களவையில் இல்லை. இப்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ஏகமனதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையொட்டி நடிகரும், தவெக தலைவருமான விஜய் ராகுல் காந்திக்கு தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள்’, என்று பதிவிட்டுள்ளார்.