கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜெயிலர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குட்டி கதை ஒன்றை கூறினார். அவர் காட்டில் சிறிய மிருகங்கள் எப்போதும் பெரிய மிருகங்களை தொல்லை செய்து கொண்டே இருக்கும். உருவத்தில் சிறிய காகம் எப்போதும் பெரிய கழுகை சீண்டிக்கொண்டே இருக்கும்.
ஆனால் கழுகு எப்போதுமே அமைதியாகவே இருக்கும். பறக்கும்போது கழுகைப் பார்த்து காகம் உயரமாக பறக்க நினைக்கும். ஆனாலும் காகத்தால் அது முடியாது. ஆனால் கழுகு தன் இறக்கையை ஆட்டாமல் எட்ட முடியாத உயரத்தில் பறந்துகொண்டே இருக்கும் என்று பேசியிருந்தார். யாரையும் குறிப்பிடாமல் அவர் பேசினாலும் சோஷியல் மீடியாவில் ஆளாளுக்கு தங்களது கருத்தை பதிவிட தொடங்கினர். குறிப்பாக, நடிகர் விஜய்யை மனதில் வைத்தே அவர் இவ்வாறு பேசியதாக அவரது ரசிகர்கள் ரஜினிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர். பதிலுக்கு ரஜினி ரசிகர்களும் விஜய்க்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் , தற்போது மதுரையில் விஜய் ரசிகர்கள் ரஜினிக்கு சவால் விடும் வகையில் போஸ்ட்டர்கள் ஒட்டி உள்ளனர். அதில் “என்னுடைய உச்சம் … உனக்கு ஏன் அச்சம் ? என்ற. வாசகத்தோடு ரஜினி மற்றும் விஜய் படங்களை அச்சிட்டு ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.