மதுரையில் ரஜினி ரசிகர் பால் தம்புராஜ் இல்ல விழாவுக்கு ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் வந்தார். பின்னார் அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக மக்கள் நடிகர் விஜய்யை அரசியலில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.விஜயகாந்தை மக்கள் ஏற்றுக்கொண்டது போல் விஜயை ஏற்றுக் கொள்வார்களா? என்பதை மக்களிடம் தான் கேட்க வேண்டும். அதே சமயம் ரஜினிகாந்துக்கு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலில் நடிகர் விஜயை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என ரஜினிகாந்த் அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்தது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.