நடிகர் விஜய் கட்சி மாநாடு குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சீமான் கூறியதாவது: “திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கண் என்பது அவருடைய கருத்துகள், எங்களுடைய கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. கருவாட்டு சாம்பார் என்பதுபோல் இருக்கிறது விஜய் இரண்டையும் சேர்த்துப் பேசியிருப்பது.
இது என் நாடு, என் தேசம், இங்கு வாழுகின்ற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். எங்களுடைய கொள்கை தமிழ் தேசம். எனவே எங்கள் இருவருடைய கொள்கையும் ஒன்றாக இல்லை. மொழிக் கொள்கையிலும் முரண்பாடு இருக்கிறது. மற்றபடி, சில விஷயங்களில் நாங்கள் சொல்வதையே அவரும் சொல்கிறார்.” என்றார்.