நடிகர் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ,இன்று வெளியாகி உள்ளது. இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்ச்சாகத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள முருகாலயா, துரைஸ், தங்கம் தியேட்டர்களில் இரவு ஒரு மணி காட்சி துணிவும், அதிகாலை நான்கு மணி காட்சி வாரிசும் ரசிகர்களுக்கு
திரையிடப்பட்டது. தினமும் ஜந்து காட்சிகள் நடைபெற உள்ளது, ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 800 முதல் 1500 வரை விற்பனை செய்து உள்ளனர், முருகாலயா தியேட்டர் முன் திரண்டிருந்த அஜித் ரசிகர்களிடம், விஜய் ரசிகர்கள் போதையில் தகராறு செய்தார்களாம். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் அப்புறபடுத்தினர்.