நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகளுக்கும் கிண்டல்களுக்கும் உள்ளாகினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக தனுஷ் பேசிய வீடியோவை விக்னேஷ் சிவன் வெளியிட்டார். அதுவும் சர்ச்சையாக அப்பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். அதற்குப் பிறகு ‘நானும் ரவுடிதான்’ படத்தினை முன்வைத்து பலரும் கேள்வி எழுப்பி வந்தார்கள். இதைத் தாண்டி தனியார் யூடியூப் சேனல் ஒன்று ஏற்பாடு செய்த முன்னணி இயக்குநர்களின் பேட்டியில் கலந்து கொண்டார். இதன் மூலமும் கடுமையான கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார் விக்னேஷ் சிவன். அவர்கள் அனைவருமே சமீபத்தில் படம் இயக்கி வெற்றி கண்டவர்கள். ஆனால், அதில் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கும் ஏதுவாக அமைந்தது. ஆகையால் தொடர்ச்சியாக மீம்ஸ் கிண்டலுக்கு ஆளானார் விக்னேஷ் சிவன். இந்த இரண்டு சர்ச்சைகளையும் முன்வைத்து தனது எக்ஸ் தளத்தில் இருந்துவெளியேறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.