மயிலாடுதுறையில் உள்ள பதிவுத்துறை ஒருங்கிணைந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மனோகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. கணக்கில் வராத 22 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்து விடிய விடிய விசாரணை:-
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். டிஎஸ்பி மனோகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் அருள் பிரியா மற்றும் போலீசார் நேற்று மாலை பதிவுத்துறை அலுவலகத்தில் நுழைந்தனர். அங்கு கதவுகளை சாத்திவிட்டு
பல்வேறு பணிகளுக்காக அலுவலகத்துக்கு வந்திருந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களில், ரூபாய் ஆயிரத்துக்கும் குறைவான வகையில் தொகை வைத்திருந்தவர்களை வெளியில் அனுப்பிவிட்டு கூடுதல் தொகை வைத்திருந்தோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
நள்ளிரவு 12 மணியை கடந்தும் விசாரணை நீடித்த நிலையில்,
சார் பதிவாளர் நிலை -2 அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் சரண்யாவிடம் இருந்து ரூ. 5400, டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் ஜி.அபிராமியிடமிருந்து ரூ.2,500, நில புரோக்கர் எஸ்.செந்தில்குமார் என்பவரிடம் இருந்து ரூ.2,800 மற்றும் முதல் தளத்திலுள்ள அலுவலக பதிவு அறையிலிருந்து கணக்கில் வராத ரூ.12,000 என மொத்தம் ரூ.22,700 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.