கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பிச்சம்பட்டியை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மாமனார் கடந்த 1996ம் ஆண்டு உயிரிழந்ததை தொடர்ந்து தனது மனைவி செல்லம்மாள் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்து கொள்வதற்காக வாரிசு சான்றிதழ் கேட்டு கடந்த 2010ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு அப்போதைய கிருஷ்ணராயபுரம் வடக்கு விஏஒ பெரியசாமி 1200 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனமில்லாத கூலி தொழிலாளி பெரியசாமி, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விஜிலன்ஸ் போலீசார் லஞ்சமாக 1200 ரூபாய் வாங்கிய விஏஓவை வையும் அவருக்கு உதவியாக இருந்த தலையாறி கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த சிறப்பு நீதிபதி ராஜலிங்கம், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக விஏஓ பெரியசாமிக்கு 2 பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும், இதற்கு உடந்தையாக இருந்த கிராம உதவியாளர் கிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து அவட்றை ஏக காலத்தில் அனுபவிக்க தீர்ப்பளித்தார்.