கோவையில் கடந்த ஒரு வார காலமாக மழை பொழிந்து வருகின்றது. வெப்பம் தணிந்து குளுமையான சூழல் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையிலே, கோவை தொண்டாமுத்தூர், வேடப்பட்டி அருகே ஒரு வீட்டின் புல்வெளி பகுதியில் மயில் ஒன்று வந்தது. அந்த மயில் தோகை விரித்து ஆடிய அழகிய காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. பொதுவாக மழை வரும் நேரத்தில் ஆண் மயில் தோகை விரித்து ஆடும் என்று சொல்வார்கள். அந்த வகையில், கோவையில் அவ்வப் போது மழை பொழியும் நிலையில், இந்த ஆண் மயில் தோகை விரித்து ஆடிய இந்தக் காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பதியப்பட்டு அதிகமாக வைரலாகி வருகிறது. தோகை விரித்து மயில் நடனம் ஆடுவது காண்போரை ஈர்த்தது.