தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தம்பிக்கோட்டை மேலக்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயர் ஸ்ரீ சாய் பாபா ஆலயத்தில், பத்தாம் ஆண்டு கன்யா மாத விசேஷ இஸ்தர வார ஹோம திருமஞ்சன விழா நடந்தது. இதையொட்டி புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை வி .பாலசுப்ரமணியன்( தாளாளர் லாரல் கல்வி நிறுவனங்கள்) மண்டகப்படியை முன்னிட்டு மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெற ஞாபக சக்தி நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்று வித்யா ஹோமம் நடைபெற்றது விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
