ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் கொண்டு வரவேண்டும் இல்லையென்றால், டெல்லியை நோக்கி வணிகர்களை திரட்டி போராட்டம் நடத்த திரள்வோம், ஆலங்காயத்தில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின், பேரமைப்பு சார்பில், வணிகர் தின அதிகார பிரகடன மாநாடு குறித்த திருப்பத்தூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இதில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார், அப்பொழுது இஸ்லாமியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விக்கிரமராஜா பங்கேற்றார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் விக்கிரமராஜா கூறியதாவது:
தமிழ்நாடு வணிகர்சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் தின 42 வது மாநில மாநாடு மதுராங்கத்தில் , வரும் மே 5 ம் தேதி நடைபெற உள்ளது,
இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானமாக ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்பது 2017 அமல்படுத்தப்பட்ட போது,சட்டங்களை எளிமை ஆக்குவோம்,என்று கூறினார்கள், ஆனால் 2017ல் போடப்பட்ட ஜி.எஸ்.டி சட்டம் லட்ச கணக்காண வணிகர்களுக்கு, நோட்டீஸ் மூலம் லட்சக்கணக்கில் அபராத தொகையை விதித்து கலங்கடித்து கொண்டிருக்கின்றார்கள்,
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 2017 முதல் 2022 வரை என்னென்ன வழக்குகள், நிலுவையில் உள்ளதோ,அதை சமாதான திட்டம் முறையில் வணிகர்களை அமைதியான முறையில், வணிகம் செய்ய வழிவகை செய்யவேண்டும், என்பதை வலியுறுத்துகிறோம்,
இதனை மத்திய அரசு,மத்திய நிதி அமைச்சகம், எதிர்கொள்ளவில்லையென்றால், ஏற்கனவே திட்டமிட்டுள்ளது போல், தமிழ்நாட்டில் உள்ள வணிகர்களை ஒன்றுதிரட்டி, டில்லியை நோக்கி மாபெரும், பேரணி, தர்ணா போராட்டம் நடத்தப்படும், அதற்கான தேதி மே 5 ம் தேதி மாநாட்டில், அறிவிக்கப்படும், என்பதை எச்சரிக்கை உணர்வோடு பதிவு செய்கிறேன்,
இவ்வாறு அவர் கூறினார்.