கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம், புகளூர், நொய்யல், சேமங்கி, நடையனூர், மரவாபாளையம், கட்டிப்பாளையம், தவிட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் பாசன வாய்க்கால் மூலம் வெற்றிலை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்பட்ட வருகிறது . கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1000 ஏக்கர் வரை வெற்றிலை விவசாயம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது. இதற்குக் காரணம் வெற்றிலையில் தோன்றும் பல்வேறு நோய் தாக்கங்களுக்கு நேரடியாக இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் மற்ற பயிர்களுக்கு அடிக்கும் மருந்துகளை தெளித்து தற்காத்துக் கொண்டு வருகின்றனர்.
இதனால் முறையாக வெற்றிலை விவசாயத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த முடியவில்லை எனவும், மேலும் முகூர்த்த காலங்களில் வெற்றிலையின் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், மற்ற காலங்களில் வெற்றிலையின் தேவை சராசரியாக இருக்கும். தற்போது கற்பூரம் மற்றும் வெள்ளைக்கொடி ஆகிய 2 ரகங்கள் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. 100 வெற்றிலைகள் கொண்டதும் ஒரு கவுளி ஆகும். கடந்த மாதம் 100 கவுளிகள் கொண்ட ஒரு சுமை ரூபாய் 8,000 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது 5000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. குறிப்பாக கற்பூரம் வெற்றிலை 100 ஜவுளி ரூபாய் 5,000 முதல் 4,000 வரை விற்பனை ஆகிறது. இதனால் பொருளாதாரத்தில் மிகுந்த பின் தங்கிய நிலை வெற்றிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டு வருகிறது எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் வெற்றிலை விவசாயிகளின் நிலை மிக மோசமாக மாறிவிடும் எனவும் தெரிவித்தனர்.