Skip to content

கரூரில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி-சேலை….

தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் அன்னதானம் வழங்கிய திமுக தாந்தோணி மேற்கு ஒன்றியம் சார்பில் வழங்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் 344 இடங்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கரூர் கோவை சாலையில் அமைந்துள்ள தாந்தோணி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் கோயம்பள்ளி பாஸ்கர் ஏற்பாட்டில் அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுக கழக கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

error: Content is protected !!