இயக்குனர் வெற்றி மாறனின் தாயார் மேகலா சித்திரவேல் அவர்களுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையால் கிடைத்த கௌரவத்தை நேரில் பார்த்து கைதட்டி வெற்றிமாறன் ஊக்குவித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்திரவேல் ஒரு எழுத்தாளர் என்பதும், அவர் எழுதிய பல நாவல்கள் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ’கமலி அண்ணி’ ’ரதிதேவி வந்தாள்’ ’வசந்தமே வருக’ ’மழை மேக மயில்கள்’ ’கங்கா’ உள்ளிட்ட நாவல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் மேகலா சித்திரவேல் அவர்கள் எம்ஜிஆர் பாடல்கள் பற்றிய ஆய்வு செய்த நிலையில் அந்த ஆய்வுக்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையால் அவர் முனைவர் பட்டம் பெற்றார். தனது தாய் முனைவர் பட்டம் பெற்றதை பார்வையாளராக அமர்ந்து வெற்றிமாறன் கைதட்டி ஊக்குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.