Skip to content
Home » இஸ்ரோவின் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி – டி3 ராக்கெட்…

இஸ்ரோவின் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி – டி3 ராக்கெட்…

 ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, இன்று  காலை, 9:17 மணிக்கு, இ.ஓ.எஸ்., – 08 செயற்கைக்ளுடன்  எஸ்.எஸ்.எல்.வி., – டி3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 13 நிமிடங்களில்   பூமியில் இருந்து, 475 கி.மீ., உயரம் உள்ள சுற்று வட்ட பாதையில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக  நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ புவி கண்காணிப்பு செயல்பாட்டிற்காக, 175.50 கிலோ எடை கொண்ட ‘இ.ஓ.எஸ்., – 08’ செயற்கைக்கோளை  வடிவமைத்துள்ளது.  ஓராண்டு ஆயுட்காலம் உடைய அதில், ‘எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்ப்ராரெட் பேலோட், குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் – ரெப்லெக்டோமெட்ரி பேலோட், சிக் யுவி டோசிமீட்டர்’ ஆகிய அதிநவீன ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதன்பணி பேரிடர் காலங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது, காலநிலை கண்காணிப்பு , காட்டு தீ கண்காணிப்பு, எரிமலை வெடிப்பு கண்கானிப்பு மற்றும் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை கண்காணிப்பது போன்ற பணிகளையும், கடலில் வீசும் காற்றின் வேகம் மற்றும் மண்ணில் ஈரப்பதம் ஆகியவற்றையும் இமாலய மலை தொடர்களில் பெய்யும் பனிப் பொழிவு அளவு ஆகிய தரவுகளையும் முன்கூட்டியே தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SSLV

இந்த செயற்கைக்கோளின் மற்றொரு முக்கிய பணியாக, இஸ்ரோவின் கனவு திட்டமான இந்தியர்கள் விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு சென்று அங்கு 3 நாட்கள் நாட்கள் விண்வெளியில் தங்கி இருக்கும் போது அவர்களை கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவில் கூட மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் என கூறப்படுகிறது.   அதன்காரணமாக இந்த செயற்கைகோள் தயாரிப்பத்தில் இதுவரை பயன்படுத்தப்படாத மிகவும் துல்லிமான மற்றும் அதி நவீன கருவிகள் இந்த செயற்கை கோள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!