நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் தர்மலிங்கம் வயது 46 அவரது மனைவி அமுதா வயது 40 வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் குழந்தைகள் இல்லாததால் குழந்தை போல் பாசமாக அப்பு என்ற நாய்க்குட்டியை கடந்த 10 ஆண்டுகளாக வளர்த்து வருகின்றனர். தர்மலிங்கம் வீட்டிற்கு அருகே மல்லிகை கடை வைத்துள்ளார். மளிகை கடைக்கு அருகே நாய் அப்பு எதிர்பாராத விதமாக சாலையில் சென்ற போது அங்கு வந்த லாரியில் கடந்த 11தேதி அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டது. இதைப் பார்த்த தர்மலிங்கம் அவரது மனைவியும் கதறி அழுதனர்.
பின்னர் நாய் அப்புவின் உடலுக்கு மலர்மலை அணிவித்து அவர்களது தோட்டத்தில் புதைத்து மனிதர்களுக்கு இறுதி சடங்கு செய்வதுபோல் தர்மலிங்கம் மொட்டை அடித்து அனைத்து சடங்குகளும் செய்துஅஞ்சலி செலுத்தினர். பின்னர் இறந்த நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா நடத்த முடிவு செய்தனர். படத்திறப்பு விழாவிற்கான பத்திரிக்கையை வாட்ஸ் அப் மூலம் உறவினர்கள் நண்பர்கள் என 200க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டு 10வது நாளான நேற்று அவர்களது இல்லத்தில் அலங்காரம் செய்யப்பட்டு நாட் க அப்புவிற்குபடதிறப்பு விழா நடைபெற்றது.
நான் அப்புவின் திருவுருவப் படத்தினை கருப்பம்புலம் அரசு கால்நடை தலைமை மருத்துவர் மீனாட்சிசுந்தரம் திறந்து வைத்து மாலை அணிவித்தார். அங்கு வந்திருந்த உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் நாய் அப்புவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர் மனைவி கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
நாய் அப்புவிற்கு பிடித்த சிக்கன் பிரியாணி, பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வைத்து படையல் இடப்பட்டது. நாய் படத்திறப்பு விழாவை வாட்ஸ் அப்பில் பார்த்த அப்பகுதி கால்நடை மருத்துவர்கள், கால்நடை மருத்துவ உதவியாளர்கள் ஏராளமானோர் வருகை தந்து திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நாய் அப்பு படபிறப்பு விழாவில் உறவினர்கள் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர் அஞ்சலி செலுத்தினர்.