நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு பகுதியில் உள்ள புதுகுளத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு முதலை கிடப்பதாக வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் வந்து முதலை இருப்பதை உறுதி செய்து எச்சரிக்கை பலகை வைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று குளத்தின் கரையோரத்தில் வலையில் பதுங்கி இருந்த முதலையை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் வலைவிரித்து பிடித்தனர். 7 அடி நீளமும் 100 கிலோ எடையுமுடைய
முதலையை பத்திரமாக கும்பகோணம் பகுதியில் அணைக்கரைக்கு பத்திரமாக வனத்துறை வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. 6 மாத காலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.