வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 9 மாணவ-மாணவிகள் 1 ஆசிரியை உள்பட 10 பேர் உயிரிழந்ததையொட்டி 14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. வேதாரண்யம்
தாலுக்கா கரியாப்பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி வேன் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த மாணவ-மாணிவகள்; 9 பேரும் சுகந்தி என்ற ஆசிரியையும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நாகக்குடையான் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் அருகே 14ம்ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் செல்லபாண்டியன் ஆசிரியர்கள் அர்ஜுனன் மனோகரன் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சிவக்குமார் துணைத் தலைவர் வீரபாண்டியன் பெற்றோர்கள் பூபதி கார்த்திகேயன் பாரதி ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் வளையம் வைத்து மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.