நாளை 4மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் எனவு ம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி வரை சென்னையில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.