தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திலும், தனுஷுடன் மாறன் இணைந்து நடித்தார்.
இதையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சுதந்திரத்திற்கு முந்தைய 18ம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்காக தற்போது முழுவீச்சில் மாளவிகா சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்படி சிலம்பம் கற்கும் வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.