ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்த லால் சலாம் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் வந்திருக்கிறார். அவரின் சகோதரியாக நடித்துள்ளார் ஜீவிதா.
லால் சலாம் படத்தின் ட்ரெய்லரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார் தனுஷ். இந்நிலையில் இன்று லால் சலாம் நாள் என எக்ஸ் தளத்தில் தனுஷ் தெரிவித்திருக்கிறார். அதை பார்த்த ரஜினி ரசிகர்களோ, தனுஷ் என்றுமே தலைவர் ரசிகர் என பாராட்டுகிறார்கள்.
இந்நிலையில் லால் சலாம் படத்தை தியேட்டரில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் X-தளத்தில் கூறியதாவது… தலைவர் என்ட்ரி மாஸாக உள்ளது. இரண்டாம் பாதி வேற லெவல். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை அழகாக காட்டியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
இரண்டாம் பாதியில் சம்பவம் செய்கிறார் தலைவர். மொய்தீன் பாய் மாஸ். 53 நிமிடங்கள் படத்தில் வருகிறார்.
முதல் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதி வேற லெவலில் உள்ளது. அண்மை காலமாக வரும் படங்களில் இரண்டாம் பாதி ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் இடைவேளைக்கு பிறகு லால் சலாம் படம் நன்றாக உள்ளது. கண்டிப்பாக வின்னர்.
படம் சும்மா அதிருது. ரொம்ப நல்லா இருக்கு. பி.ஜி.எம். சும்மா தெறிக்கிறது. செம, தரமான சம்பவம் செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
லால் சலாம் பிளாக்பஸ்டர். ரஜினி நடித்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ரஜினி வரும் சண்டை காட்சி சும்மா அதிருது. ஐஸ்வர்யா, தயவு செய்து ரஜினியை வைத்து பக்கா ஆக்ஷன் படம் ஒன்றை இயக்கவும். பம்பாய்ல பாய் ஆளே வேறடா என தெரிவித்துள்ளனர்.
லால் சலாம் படத்திற்கு பாசிட்டிவாக விமர்சனம் வருவதை பார்த்து படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது. இந்நிலையில் லால் சலாம் படம் வெற்றி பெற விஜய், அஜித் குமார், சூர்யா, தனுஷ், விக்ரம், கமல் ஹாசன் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் கம்பேக் படமாகும். என் படத்தின் ஹீரோ கதை தான் என்றார் ஐஸ்வர்யா. அந்த ஹீரோ ஐஸ்வர்யாவுக்கு கை கொடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.