Skip to content

வெண்ணைமலை தேரோட்டம்…. 15,000 பேருக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி….

  • by Authour

கரூர், வெண்ணை மலை பாலசுப்ரமணியசாமி கோவிலில் நேற்று தைப் பூச தேரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அமைச்சர் செந் தில்பாலாஜி அன்னதானம் செய்வது உண்டு.இதன்படி இவ்வாண்டும் நேற்றுகாலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக் கும் அன்னதானம் வழங்க மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 15,000 பேருக்கு அன்னதானம் அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார் . முன்னதான அன்ன தானம் வழங்குவதற்காக கோயிலில் கோயிலில் முன்புறம் பிர தான பந்தல் அமைத்து அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அன்னதான பணிகளை மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணிசரவ ணன், கரூர் கிழக்கு ஒன்றிய

பொறுப்பாளர் முத்துக்கு மாரசாமி, வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் வி.கே. வேலுசாமி, மாநகரச் செய லாளர் எஸ். பி. கனகராஜ், பகுதி கழக செயலாளர் கள் கரூர் கணேசன், ஆர். எஸ்.ராஜா, வக்கீல் சுப் பிரமணியன், ஜோதிபாசு,

வி.ஜி.எஸ்.குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் வெங்கமேடு சக்திவேல், மாநகர துணை செயலாளர் வெங்கமேடு பாண்டியன். தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கனி மொழி, செயற்குழு உறுப் பினர்கள் காலனி செந்தில் சாலை சுப்பிரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அன்னதா னம் பணியில் ஈடுபட்டனர். தேரோட்டத்தில் கலந்து கொண்ட சுமார் 15,000 பேருக்கும் மேல் அன்னதா னம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.

error: Content is protected !!