தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாகவும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ’தளபதி 68’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து நேற்று தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் வெங்கட் பிரபு செய்தியாளர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன், அஜித் மற்றும் விஜய் சேர்ந்து நடிக்கும் படத்தை தனது மகன் வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து இந்த படத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு ’அது என் தந்தையின் ஆசை, ஆனால் இந்த படத்தில் அஜித் நடிக்கவில்லை என்று கூறினார். மேலும் இந்த படத்தின் அப்டேட்டுகள் ’லியோ’ படத்தின் ரிலீஸ்-க்கு பின்னர் வெளியாகும் என்றும் அவர் கூறினார்
’தளபதி 68;’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பை விஜய் முடித்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தேதி குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.