புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், வேங்கைவயல் நிகழ்வில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சத்தியநாாயணன் , மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா முன்னிலையில் இன்று அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.