Skip to content

வேலூர்…. சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது….

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி சாலையில், சுரேஷ் என்பவருக்குச் சொந்தமான லாட்ஜில், சட்டவிரோத சூதாட்டம் நடப்பதாக பாகாயம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிைடைத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற நாகராஜன், தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது, 13-பேர் கொண்ட கும்பல் அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதனைதொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜி (50), ஜெய்சங்கர் (54), ரவி (50), சுரேஷ் (42), தினேஷ்குமார் உள்ளிட்ட 13-பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 60 ஆயிரம் பணம் மற்றும் 5  டூவீலர்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 13 பேரை வேலூர் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!