சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப் பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிராக பல் வேறு போராட்டங்களில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு தொடர்பாக சமூகவலை தளங்களில் திமுக அரசுக்கு எதிரான கடுமையான கருத்துக் களைப் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதற் கிடையில், வேலூர் மாவட்டம் வேலூர் கிராமிய போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வரும் அன்பரசன், தனது முகநூல் பக்கத் தில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிராகக் கருத்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட போலீசார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அன்பரசனை சஸ்பெண்ட் செய்து வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டுள்ளார்.