பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந் தோறும் வெல்லம் கொள் முதல் நடைப் பெற்று வருகிறது. இந் நிலையில் தேசிய வேளாண்மை மின்னணு சந்தை திட்டத்தின் கீழ் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்படி ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயணி மற்றும் வேளாண்மை உதவி அலுவலர் பாலமுருகன் ஆகியோர் பாபநாசம் அருகில் மாகாளிபுரம் கிராமத்தில் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே நேரடியாகச் சென்று 7.5 குவின்டால் வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 28,750 ரூபாய் ஆகும். இதில் மேலி 10 கே உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்று கொள்முதல் செய்தது. விவசாயிகளின் இடத்துக்கேச் சென்று வெல்லம் கொள்முதல் செய்யப்பட்டு பணம் பரிவர்த்தனை செய்யப்படுவதால் வாகனச் செலவு, ஏற்று, இறக்கு கூலி, நேர விரயம் உள்ளிட்டவை தவிர்க்கப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
