தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவராக இருந்தவர் வெள்ளையன்(76). இவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் இன்று மதியம் அவர் காலமானார்.