தமிழ்நாடு மற்றும் அந்திர மாநிலத்தை சேர்ந்த 8 பட்டதாரி இளைஞர்களுக்கு போலந்து நாட்டில் வேலை வாங்கி தருவதாக் கூறி ரூ.18 லட்சம் மோசடி செய்த தனியார் கன்சல்டன்சி நிறுவனத்தின் உரிமையாளர் மீனாட்சி(28) மற்றும் அந்த நிறுவனத்தின் மேலாளர் பாலகிருஷ்ணன்(32) ஆகியோரை ஸ்ரீரங்கம் போலீசார் புகார் கொடுத்த 2 நாளில் அதிரடியாக கைது செய்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில்… இவர்கள் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு முதல் இந்த தனியார் கன்சல்டன்சியை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது – இதுவரை சுமார் 250 நபர்களை போலந்து ருமோனியா இந்தோனேஷியா மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
போலந்து ருமேனியா போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களில் பணி நியமன ஆணைகள் பெற்று தற்சமயம் 60 முதல் 70 நபர்கள் வரை இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பெற்ற பணத்தை மலேசியாவில் உள்ள போலாந்து நாட்டின் உள்ள தனியார் நிறுவனத்தின் அலுவலக வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளனர் – இவர்களிடம் வேலை கேட்டு வரும் நபர்களிடம் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு இவர்களுடைய கமிஷன் தொகையாக 15 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகையை விமான கட்டணத்திற்கு விசா பெறுவதற்கும் எடுத்துக் கொள்கின்றனர் – இப்படி பணத்தை பெற்று கொண்டு ஏமாற்றும் இந்த கும்பலுக்கு சென்னை மும்பை மதுரை ஆகிடங்களில் சப் ஏஜென்ட்கள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல்நிலத்தில் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து 48 மணி நேரத்தில் இவர்கள் இருவரையும் அதிரடியாக கைது செய்த ஸ்ரீரங்கம் காவினுடைய போலீசாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா பாராட்டுக்கள் தெரிவித்தார்..