உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவில் ஆண்டுதிருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10-நாட்கள் திருவிழாவாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதா தேர் பவனி நேற்றிரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த லட்சகணக்கான மக்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பிறந்தநாளான இன்று காலை பேராலயத்தில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கூட்டு பாடல், மற்றும்
திருப்பலிகள் நடைபெற்றன. பின்னர் இன்று மாலை 6 மணியளவில் புனித மரியாளின் திருஉருவம் பதித்த கொடி இறக்கப்பட்டு வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா கோலாகலமாக நிறைவு பெற்றது. இதில் பேராலய பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கானய கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு அன்னையை பிராத்தித்தனர்.