ஏசு கிறிஸ்துவின் பிறப்பை, உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி வருகின்றனர். கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், அதன் கொண்டாட்டங்கள் பல இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ளன. அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கிறிஸ்மஸ் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. வேளாங்கண்ணி விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் ஒருங்கிணைந்த அன்பியங்களின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பேரணியை, பேராலய அதிபர்
இருதயராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், கிறிஸ்துமஸ் தொப்பி அணிந்து உற்சாக நடனமாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த கிறிஸ்மஸ் விழா கொண்டாட்ட பேரணியானது, புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நிறைவு பெற்றது. அப்போது கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த வந்தவர்கள் இசைக்கேற்ப நடனமாடிபடியே, குதூகளித்தவாறு ஊர்வலத்தில் சென்றது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.